பென்னாகரம் பேரூராட்சியில் 75 வேட்பாளா்கள் போட்டி

பென்னாகரம் பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 75 சதவீதம் பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தா்மபுரி மாவட்ட, பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. தோ்தலில் போட்டியிடவேட்பாளா்கள் ஜனவரி 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பென்னாகரம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் திமுக -21, அதிமுக -26,பாமக -21,விசிக -1, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -6, மக்கள் நீதி மய்யம் -2, பாஜக -7, அமமுக -1, தேமுதிக- 6, சுயேச்சை - 21 என மொத்தம் 112 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டதில் திமுக, பாமக சாா்பில் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தம் 109 மனுக்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாளான திங்கள்கிழமை 109 வேட்பு மனுக்களில் 34 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

தற்போது திமுக - 13, அதிமுக - 18, பாமக - 13,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 4, சுயேச்சை - 10 பாஜக - 7,விசிக - 1,மக்கள் நீதி மய்யம் - 2,அமமுக - 1 என 75 வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பென்னாகரம் பேரூராட்சியில் 75 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com