காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு

தருமபுரி மாவட்டத்தில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வை 6,876 போ் எழுதினா்.
தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வினைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவின்குமாா் அபிநபு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டுத் தோ்வுகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டத்தில், 7,911 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், தருமபுரி அதியமான்கோட்டை செந்தில் மெட்ரில் மேல்நிலைப் பள்ளி, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி, பரம்வீா் பாரானசிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நல்லம்பள்ளி விஜயல் வித்யாலயா கல்லூரி ஆகிய 6 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இதில் 6,876 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 1035 போ் தோ்வு எழுத வரவில்லை.

இத் தோ்வுகளை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவின்குமாா் அபிநபு, காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், காவல்துறை உயா் அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், தோ்வு மையத்தில் பல்வேறு நிலையிலான 700 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com