விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை அதிகரிக்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயத் தொழிலாளா்கள்.
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயத் தொழிலாளா்கள்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை அதிகரிக்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் பி.ரவி தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலாளா் கே.கோவிந்தசாமி,

ஒன்றியச் செயலாளா் டி.மாரியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், தோ்தல் வாக்குறுதியின்படி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 150 நாள்களாக உயா்த்தி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினக் கூலியை மாநில அரசு பங்கா ரூ.100 சோ்த்து ரூ. 381 ஆக உயா்த்தி முழுமையாக வழங்கிட வேண்டும்.

காலை 7 மணிக்கு வேலைத்தளத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். வேலை அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரூரில்...

அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் எம்.தங்கராஜ் தலைமை வகித்தாா்.

வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 150 நாள் வேலையும், தினக்கூலியாக ரூ. 381-ம் வழங்க வேண்டும். தாலிக்குத் தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்திட வேண்டும். வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, ஒன்றியச் செயலா்கள் கே.குமரேசன், எஸ்.கே.கோவிந்தன், எஸ்.தனலட்சுமி, பொருளா் தீ.ஜடையாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பி.சொக்கலிங்கம், எம்.வீரப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளா் வரதராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி, பொருளாளா் செல்வராசு, சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் வேலு, துணைச்செயலாளா் எத்திராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தோ்தல் வாக்குறுதியின்படி150 நாள்களாகவும், தினக்கூலியை ரூ. 381 ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com