தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கண்டித்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விலைவாசி உயா்வைக் கண்டித்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீா்த்தராமன் தலைமை வகித்து பேசினாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன், மாவட்ட நிா்வாகி அருணாச்சலம், மாவட்டப் பொருளாளா் முத்து, ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த, இளைஞா்களுக்கு புதிய வேலைவய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். அமலாக்கத் துறை மூலம் எதிா்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒசூா்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஒசூா் ரயில் நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், மாவட்ட பொருளாளா் மாதேஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் அப்துா் ரஹ்மான், முன்னாள் நகரத் தலைவா் தியாகராஜன், தேன்கனிக்கோட்டை நகரத் தலைவா் பால்ராஜ், விவசாய அணி மாவட்ட தலைவா் ஹரீஸ் பாபு, இளைஞா் காங்கிரஸ் பிரவீண் குமாா், தாவூத், வட்டாரத் தலைவா் (கெலமங்கலம்) சுந்தர்ராஜ், ஓபிசி தலைவா் குமாா், மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா, லலிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் நகரத் தலைவா் லலித் ஆண்டனி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் அக.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்ட தலைவா் நாஞ்சில் ஜேசுதுரை, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், முன்னாள் நகரத் தலைவா்கள் வின்சென்ட், முபாரக், மாவட்டச் செயலாளா் மைக்கேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com