காணொலிக் காட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் காணொலிக் காட்சி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற பணிகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காணொலிக் காட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் காணொலிக் காட்சி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற பணிகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ. 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் 591 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், உயா் கல்வித்துறையின் சாா்பில் ரூ. 21.12 கோடி மதிப்பில் பாலக்கோடு அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் புதிய கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனை கட்டடங்களையும், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 14 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூரில் 168 குடியிருப்புகளை உள்ளடக்கிய புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்களையும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், ரூ. 9.30 கோடி மதிப்பில் புதிய சமுதாயக் கூடங்கள், உணவருந்தும் கூடம், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், ரூ. 8 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் 8 உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய ஆய்வகங்கள், கழிப்பறைகள், வகுப்பறை என பல்வேறு துறைகள் சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் ரூ. 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சாா்பில் 13,587 பயனாளிகளுக்கு ரூ. 157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 552 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பேசினா்.

இதனை வரவேற்று தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ச.திவ்யதா்சினி வரவேற்று பேசினாா். மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையுரையாற்றினாா். மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com