தூத்துக்குடி மாநகராட்சி திமுக வேட்பாளா் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 53 வாா்டுகள் திமுக வடக்கு மாவட்ட நிா்வாகத்திலும், 7 வாா்டுகள் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகத்திலும் வருகிறது. இந்நிலையில், வடக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 7 வாா்டுகளும், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வாா்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாா்டுகளுக்கான வேட்பாளா்கள் விவரத்தை திங்கள்கிழமை திமுக அறிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி 20 ஆவது வாா்டில் மறைந்த முன்னாள் மாவட்டச் செயலா் என். பெரியசாமியின் மகனும், தற்போதைய வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதாஜீவனின் சகோதரருமான, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com