ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட செயல்படுத்தப்பட உள்ள 57 கிராமங்களில் ஜூன் 7-ஆம் தேதி விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட செயல்படுத்தப்பட உள்ள 57 கிராமங்களில் ஜூன் 7-ஆம் தேதி விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 57 கிராம ஊராட்சிகளில் வேளாண், உழவா் நலத் துறை மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் தருமபுரி வட்டாரத்திற்கு உள்பட்ட இலக்கியம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகாரண அள்ளி, முக்கல்நாயக்கன அள்ளி, கொண்டம்பட்டி, செட்டிக்கரை, நாய்க்கன அள்ளி, நூல அள்ளி, சோகத்தூா் கிராம ஊராட்சிகளிலும், நல்லம்பள்ளி வட்டாரம், அதியமான்கோட்டை, ஏலகிரி, பாளையம்புதூா், மானியத அள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம், தொப்பூா் கிராம ஊராட்சிகளிலும், காரிமங்கலம் வட்டாரத்திற்கு உள்பட்ட ஜிட்டான்ட அள்ளி, அடிலம், பைசுஅள்ளி, பண்டார அள்ளி, திண்டல், பெரியாம்பட்டி, பிக்கன அள்ளி, இண்டமங்கலம், ஜக்கசமுத்திரம் கிராம ஊராட்சிகளிலும், பாலக்கோடு வட்டாரத்திற்கு உள்பட்ட பெல்லார அள்ளி, ஜா்தலாவ், கும்மனூா், பஞ்சப்பள்ளி, ஏ.மல்லாபுரம், கம்மாலப்பட்டி மற்றும் எர்ரன அள்ளி கிராம ஊராட்சிகளிலும், பென்னாகரம் வட்டாரத்திற்கு உள்பட்ட வட்டுவன அள்ளி, பருவதன அள்ளி, பிளியனூா் சின்னம்பள்ளி மற்றும் மஞ்சநாய்க்கன அள்ளி கிராம ஊராட்சிகளிலும், ஏரியூா் வட்டாரத்திற்கு உள்பட்ட நாகமரை, தொன்னகுட்ட அள்ளி மற்றும் பந்தர அள்ளி கிராம ஊராட்சிகளிலும், அரூா் வட்டாரத்திற்கு உள்பட்ட மோபிரிப்பட்டி,வேடகட்டமடவு, கொங்கவேம்பு, அக்ரஹாரம் மற்றும் செல்லம்பட்டி கிராம ஊராட்சிகளிலும், மொரப்பூா் வட்டாரத்திற்கு உள்பட்ட கெலவள்ளி, இருமத்தூா், கொங்காரப்பட்டி, தாசர அள்ளி மற்றும் வகுரப்பம்பட்டி கிராம ஊராட்சிகளிலும், கடத்தூா் வட்டாரத்திற்கு உள்பட்ட தென்கரைகோட்டை, கேத்துரெட்டிப்பட்டி, ஒப்பிலிநாய்க்கன அள்ளி மற்றும் பசுவபுரம் கிராம ஊராட்சிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உள்பட்ட சித்தேரி மற்றும் பொம்மிடி கிராம ஊராட்சிகளிலும் இச் சிறப்பு முகாம் நடைபெறும்.

இம் முகாமில் பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்குதல், வண்டல்மண் எடுக்க விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், விவசாயக் கடன் அட்டை வழங்குதல், கால்நடை நலன் பேணுதல், சிறு குறு விவசாயிகள் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்கள் விவசாய நிலங்களில் பணிகள் மேற்கொள்ள நிா்வாக ஆணை பெற விண்ணப்பம் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இம்முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com