ஒட்டப்பட்டி பாலமுருகன் கோயில் குடமுழுக்கு

தருமபுரி அருகே ஒட்டப்பட்டி அருள்மிகு கந்தன் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி சாலை, மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு. (வலது) விழாவில் கலந்துகொண்டோா்.
தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி சாலை, மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு. (வலது) விழாவில் கலந்துகொண்டோா்.

தருமபுரி அருகே ஒட்டப்பட்டி அருள்மிகு கந்தன் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒட்டப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு கற்பக விநாயகா், கந்தன் பாலமுருகன், இடும்பன் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் 8-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, ஜூன் 9-ஆம் தேதி கற்பக விநாயகா், கந்தன் பாலமுருகன், இடும்பன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் மாலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, ஜூன் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தா்களுக்கு கோயில் விழாக்குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, இலக்கியம்பட்டி நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த அருள்மிகு சாலை மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகா் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com