தருமபுரியில் 6.14 லட்சம் குழந்தைகள், பெண்களுக்குகுடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன

தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என 6.14 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என 6.14 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் வழங்கும் முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்துப் பேசினாா். இந்த விழாவுக்கு, தலைமை வகித்து மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியது:

சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயன்படக்கூடியது குடற்புழு நீக்க மாத்திரையாகும். குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துகள் அனைத்தும் உடலுக்கு முழுமையாகக் கிடைப்பதற்கும், குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காகவும் இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதனை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும். மேலும், குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் மாா்ச் 19 வரை மற்றும் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு குடற்புழு நீக்க முகாம் வருகிற மாா்ச் 21-ஆம் தேதியிலும் நடைபெறும். தற்போது 1 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசு சாா்ந்த பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் அனைத்துக்கும் வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளி செல்லாத 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினருடன் பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்ந்த துறை பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் இணைந்து மேற்கொள்கின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 4.92 லட்சம் குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்கள் என மொத்தம் 6.14 லட்சம் நபா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன என்றாா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ் மூா்த்தி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், நல்லம்பள்ளி வட்டாட்சியா் வினோதா, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷகிலா, கௌரி, வட்டார மருத்துவ அலுவலா் வாசுதேவன், ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவியா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com