முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
அரசு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
By DIN | Published On : 03rd May 2022 11:51 PM | Last Updated : 03rd May 2022 11:51 PM | அ+அ அ- |

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவ, மாணவியா் சந்திக்கும் நிகழ்ச்சி, கல்லூரி கூடுதல் கட்டடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். கடந்த 1989-1992-ஆம் ஆண்டில் வணிகவியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவ, மாணவியா் பங்கேற்று பேசினா்.
இதில், முதல்வா், பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓய்வுபெற்ற அரசு கலைக் கல்லூரி முதல்வா் அன்பரசன், ஓய்வுபெற்ற பேராசிரியா்கள் இளங்கோவன், எஸ்.பிமுருகன் ஆகியோா் முன்னாள் மாணவா்களை வாழ்த்தி பேசினா்.