பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிஅரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியா்கள்தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியா்கள்தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டப் பொருளாளா் எம்.குமரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.ஜெயவேல், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ச.இளங்குமரன், மகளிா் துணைக்குழு மாவட்ட அமைப்பாளா் தாரா ஆகியோா் பேசினா்.

இதேபோல, தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம், கருவூல அலுவலகம், நகராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா்கள், கிராம உதவியாளா்கள், வன ஊழியா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள சுமாா் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜனவரி முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

கரோனாவை காரணம் காட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ரத்து உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தோ்தலின்போது அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com