முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
கொக்கராப்பட்டி புதன் சந்தை மறு ஏலம்
By DIN | Published On : 13th May 2022 11:25 PM | Last Updated : 13th May 2022 11:25 PM | அ+அ அ- |

கொக்கராப்பட்டி புதன் சந்தை ரூ. 13.40 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை மறு ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கொக்கராப்பட்டி ஊராட்சி, புழுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை கூடுகிறது. இந்த சந்தை வளாகத்தில் கோழி, ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான சந்தை நுழைவுக் கட்டணம் வசூல் செய்வதற்கான குத்தகை ஏலம், அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது ரூ. 10.22 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலம் முடிந்த பிறகு 10 சதவீதம் கூடுதல் பணம் செலுத்துவதாகவும், சந்தையை மறு ஏலம் விடவேண்டும் எனவும் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, புதன் சந்தை குத்தகை ஏலம், ரூ. 13.40 லட்சத்துக்கு மறு ஏலம் விடுப்பட்டது. கொக்கராப்பட்டி புதன் சந்தை குத்தகை ஏலம் கடந்த காலங்களில் ரூ. 3.50 லட்சத்துக்கும் குறைவான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ. 13.40 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.