அரூா் வட்டாட்சியராக ஆ.பெருமாள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த ஆ.பெருமாள், அரூா் வருவாய் வட்டத்தின் புதிய வட்டாட்சியராகப் பொறுப்பேற்றாா். அரூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சி.கனிமொழி, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தின் தனி வட்டாட்சியராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.