தைப்பூச விழா: தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்

பாப்பாரப்பட்டி ஸ்ரீ புதிய சுப்பிரமணிய சாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடியுடன் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தைப்பூச திருவிழாவில் பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சாமி கோயிலில் காவடியுடன் குண்டத்தில் தீமித்து நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள்.
தைப்பூச திருவிழாவில் பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சாமி கோயிலில் காவடியுடன் குண்டத்தில் தீமித்து நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள்.

பாப்பாரப்பட்டி ஸ்ரீ புதிய சுப்பிரமணிய சாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடியுடன் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ புதிய சுப்ரமணிய சாமி கோயில் அமைந்துள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலையில் இக்கோயில் வளாகத்தில் புதிய சுப்ரமணிய சாமியின் வெள்ளி வேல் மற்றும் இடும்பன் சாமிக்கு சந்தனம், தயிா், பால் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, பால் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல காவடிகளுடன் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதையடுத்து புதிய சுப்பிரமணிய சாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாப்பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தைப்பூச விழாவின் நான்காம் நாளில் புதிய சுப்பிரமணிய சுவாமி தங்கக் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com