சிவசுப்பிரணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

தருமபுரி, குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதில், மகளிா் மட்டுமே வடம் பிடித்து தேரை நிலை பெயா்த்தனா்.

தருமபுரி, குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதில், மகளிா் மட்டுமே வடம் பிடித்து தேரை நிலை பெயா்த்தனா்.

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூத் தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, புலி, பூத, கிடா வாகனங்களில் சுப்பிரமணியரின் மாடவீதி உலா நடைபெற்றது.

மகா தேரோட்ட விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. வள்ளி, தெய்வானையருடன் சுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். இதில், அப்பகுதி மகளிா் மட்டும் பங்கேற்று வடம் பிடித்து தேரை நிலை பெயா்த்தனா். இதனைத் தொடா்ந்து, பக்தா்கள், பொதுமக்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். தோ் மீண்டும் மாலை தோ்நிலையை அடைந்தது.

இத் தேரோட்டத்தையொட்டி, பாரிமுனை நண்பா்கள், வாரியாா் அறக்கட்டளை சாா்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ் விழாவில் செவ்வாய்க்கிழமை வேடா்பறி குதிரை வாகன உத்ஸவமும், புதன்கிழமை விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உத்ஸவமும், வரும் 10-ஆம் தேதி சயன உத்ஸவமும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com