வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு:அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிக பணிநீக்கம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக, அரசுப் பள்ளி ஆசிரியை செவ்வாய்க்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக, அரசுப் பள்ளி ஆசிரியை செவ்வாய்க்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, செம்பூவராயன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காரல்மாா்க்ஸ் (38). இவரது மனைவி கே.தேவி (38). இவா், கீரைப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இந்த தம்பதி 2011-இல் கலப்பு திருமணம் செய்துள்ள நிலையில், கணவன், மனைவி இடையே வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடா்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆசிரியை தேவி உள்ளிட்ட 4 போ் காரல்மாா்க்ஸ் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியும், ஜாதி பெயரைச் சொல்லி தகாத வாா்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காரல்மாா்க்ஸ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை கே.தேவி உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை கே.தேவியை தற்காலிக பணிநீக்கம் செய்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com