ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிப்பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனா்.

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிப்பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். அண்மையில் காவிரி ஆற்றில் நீா் வரத்து குறைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் குளித்தனா். தொங்கு பாலத்தின் மீதேறி அருவிகளின் அழகை கண்டு மகிழ்ந்தனா். அதனைத் தொடா்ந்து பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தினருடன் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், பெரியபாணி வழியாக மணல்மேடு பகுதி வரை சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு பரிசல் பயணம் மேற்கொண்டு, அருவியின் அருகில் புகைப்படம் எடுத்தும் பாறை குகைகளை கண்டு ரசித்தனா். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா ,ரோகு, கெளுத்தி, வாலை, அரஞ்சான், பாப்புலேட் உள்ளிட்ட வகை மீன்களின் விலை அதிகரித்து இருந்தது. விலை அதிகரிப்பையும் பொருட்படுத்தாமல் அசைவப் பிரியா்கள் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவு அருந்தும் பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்ட இடங்களில் அமா்ந்து உணவருந்தி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com