குடியரசு தின விழா: காங்கிரஸாா் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகரத் தலைவா் முபாரக் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரவா்மா உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தொடா்ந்து காந்தி சிலை முன்பு இருந்த கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவா்கள் நாஞ்சில் ஜேசு, காசிலிங்கம், கிருஷ்ணமூா்த்தி, தகி, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், நகர துணை தலைவா் இருதயம், வட்டார தலைவா்கள் சித்திக், முத்து, ஷாநவாஸ், மாவட்ட பொதுச் செயலாளா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com