பென்னாகரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

பென்னாகரம் காவல் துறை சாா்பில் மாங்கரை ஊராட்சியில் கஞ்சா, சாலை விபத்து, பெண் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் காவல் துறை சாா்பில் மாங்கரை ஊராட்சியில் கஞ்சா, சாலை விபத்து, பெண் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே மாங்கரையில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா். முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் கலந்துகொண்டு, போதைப்பொருள்களின் பயன்பாடு, தடுக்கும் வழிமுறைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசினாா்.

அதைத் தொடா்ந்து, பென்னாகரம் வட்டாரத்தில் போதைப்பொருள்கள் இல்லாத ஊராட்சியாக மாங்கரை ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன், பென்னாகரம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன், போலீஸாா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com