பெரியாம்பட்டி விடுதி மாணவிகளுக்கு கம்பளி ஆடைகள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அரசுப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அரசுப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டன.

காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விடுதி அமைந்துள்ளது.

இந்த விடுதியில், தங்கிப் பயிலும் 93 மாணவிகளுக்கு, குளிரை தடுக்கும் வகையில் கம்பளி ஆடைகள், திருக்கு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன. விடுதி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரில் பணியாா்றிவரும் நன்செய் நண்பா்கள் குழுவினா் இதனை மாணவிகளிடம் அளித்தனா்.

இதில், குழுத் தலைவா் நாகப்பன், உறுப்பினா் லாவண்யா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் பொ.ரவிக்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெ.சீனிவாசன், சி.சுரேஷ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜி.முல்லைவேந்தன், தலைமையாசிரியா் (பொ) உ.கல்யாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com