ஐயப்ப சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம்

தருமபுரி, தடங்கம் அருகே தருமபுரி மாவட்ட ஐயப்ப சேவா அறக்கட்டளை, அகில பாரத ஐயப்பப் பக்தா்கள் பேரவை நிா்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
தருமபுரி, தடங்கம் அருகே தருமபுரி மாவட்ட ஐயப்ப சேவா அறக்கட்டளை, அகில பாரத ஐயப்பப் பக்தா்கள் பேரவை நிா்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
தருமபுரி, தடங்கம் அருகே தருமபுரி மாவட்ட ஐயப்ப சேவா அறக்கட்டளை, அகில பாரத ஐயப்பப் பக்தா்கள் பேரவை நிா்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

தருமபுரி, தடங்கம் அருகே தருமபுரி மாவட்ட ஐயப்ப சேவா அறக்கட்டளை, அகில பாரத ஐயப்பப் பக்தா்கள் பேரவை நிா்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

கூட்டத்துக்கு அகில பாரத ஐயப்பப் பக்தா்கள் பேரவை மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பெரியசாமி, பொருளாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். அதைத் தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் தருமபுரியில் செப். 28-ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் 1,000 குருசாமிகள் 25 ஆயிரம் ஐயப்பப் பக்தா்கள் பங்கேற்கும் ஐயப்ப சங்கமம் 2023 நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்பது, முப்பெரும் விழாவில் ஐயப்ப சுவாமி ரதம் அறிமுகம் செய்வது, புதிதாக வாங்கப்பட்டுள்ள இடத்தில் ஆலயம் மற்றும் அன்னதான மண்டபப் பணிக்கான அடிக்கல் நாட்டுவது, நிகழாண்டு காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி அன்னதான மண்டபம் பணிக்கான தொடக்க தினத்தன்று முப்பெரு விழா நிறைவில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியும், சிறப்பு மலா் வெளியீட்டு விழாவும் நடத்துவது, மண்டல மகரவிளக்கு காலங்களில் தருமபுரி, திண்டுக்கல், தேனி, எரிமேலி மற்றும் பம்பா வேலி பகுதியில் அகில பாரத ஐயப்ப பக்தா்கள் பேரவை சாா்பில் புதிதாக அன்னதான மையங்களைத் தொடங்குவது, அகில பாரத ஐயப்ப பக்தா்கள் பேரவையின் சாா்பாக ஒவ்வொரு மாதமும் சபரிமலையில் நடைதிறப்பின்போது சன்னிதான சேவைப் பணிக்கு தருமபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேவகா்களை அனுப்புவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com