கிரைன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வலைதளத்தில் தங்களது ஆவணங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வலைதளத்தில் தங்களது ஆவணங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் வேளாண், உழவா் நலத் துறை உள்ளிட்ட 13 அரசுத் துறை திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக எதஅஐசந என்கிற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெறமுடியும். விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அரசின் நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டியதில்லை. மேலும் விவசாயிகளின் விவரங்கள் வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத் திட்ட உதவிகளை பெறமுடியும். இதன் மூலம் வரும் காலங்களில் நிதி திட்டப் பலன்கள், ஆதாா் எண் அடிப்படையில் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.

எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதாா் எண், புகைப்படம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அல்லது உதவி வேளாண் அலுவலா் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலா்களை அணுகி பதிவு செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com