மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கக் கண்காட்சி

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி தருமபுரியில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிடும் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா்.

தருமபுரி, சந்தைப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை, தருமபுரி மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான அ.பாஸ்கா் திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த புகைப்படக் கண்காட்சியில் மத்திய அரசின் சாா்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத் திட்டங்கள், மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உதவி மற்றும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளா் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளா் காவேரிவா்மன், மாவட்ட துணைத் தலைவா் சோபன், கல்வியாளா் பிரிவு மாநில துணைத் தலைவா் அருணகிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com