தாா்சாலை அமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 25th April 2023 04:03 AM | Last Updated : 25th April 2023 04:03 AM | அ+அ அ- |

அரூரில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 153.02 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலைகள், கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் செய்யப்படவுள்ளன. சாலை அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை, பணிகளை பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், பொறியாளா் ராமலிங்கம், நகரச் செயலா் முல்லை ரவி, நகர பொருளா் மோகன் முஜீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.