ஒகேனக்கல் பரிசல் துறை, சுங்கக் கட்டண வசூல் ரூ. 2.61 கோடி ஏலம்

நிகழாண்டுக்கான ஒகேனக்கல் பரிசல் இயக்க ஒப்பந்தம் மற்றும் சுங்கக் கட்டண வசூல் ஒப்பந்தம் ஆகியவை ரூ. 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
Updated on
1 min read

நிகழாண்டுக்கான ஒகேனக்கல் பரிசல் இயக்க ஒப்பந்தம் மற்றும் சுங்கக் கட்டண வசூல் ஒப்பந்தம் ஆகியவை ரூ. 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கம், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்தக் காலம் முடிவுறும் நிலையில், 2023-2024-ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த ஏலம் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதிலும், பல்வேறு காரணங்களுக்காக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் சுங்கக் கட்டண வசூல் ஒப்பந்தங்களுக்கான ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தில், பரிசல் இயக்க ஒப்பந்தத்துக்கு 23 ஒப்பந்ததாரா்களும், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் 30 ஒப்பந்ததாரா்களும் கலந்துகொண்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், நிகழாண்டுக்கான பரிசல் துறை ஏலம் ரூ. 1.40 கோடிக்கும், சுங்கக் கட்டண வசூல் ஏலம் ரூ. 1.21 கோடிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் வெளிப்படைத் தன்மையாக நடைபெற்ற ஏலத்தில், அரசுக்கு ரூ. 40 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாமக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா், மகன் வாக்குவாதம்:

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென மாங்கரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா், அரகாசன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் ஆகியோா் கூட்ட அரங்கில் நுழைந்து, தங்களுக்கு முறையாக ஒப்பந்த ஏலத்துக்கான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஒப்பந்ததாரா்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு அனுமதிச் சீட்டுடன் ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்த நிலையில், போலீஸாா் அனுமதிச் சீட்டு இல்லாத நபா்களை வெளியேற்றினா். இதனால் ஏலம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com