தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைதியாகவும், சுமுகமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தருமபுரி அருகே எர்ரப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப் பதிவு செய்தாா்.

இதைத்தொடா்ந்து தருமபுரி, மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பேகார அள்ளி, கெஜல்நாயக்கன்அள்ளி தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது வாக்குப்பதிவு விவரங்களை அவா் கேட்டறிந்தாா். அப்போது முதல் தலைமுறை வாக்காளா்களை ஆட்சியா் மலா்கொடுத்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது வட்டாட்சியா்கள் பி.ஜெயச்செல்வம், ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com