விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டுக்கான முதன்மைநிலை விளையாட்டு மையம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் சேருவதற்கான தகுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவ மாணவியருக்கு தடகளப் போட்டிகள் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கிலும், இறகுப் பந்து, வில்வித்தை இருபாலருக்கும் சென்னை நேரு பூங்கா விளையாட்டரங்கம், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் இருபாலாருக்கும் சென்னை வேளச்சேரி நீச்சல் குளம் வளாகம், டென்னிஸ் இருபாலருக்கும் விளையாட்டிற்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னையிலும், சைக்கிளிங் விளையாட்டிற்கு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் மேலகோட்டையூா், செங்கல்பட்டிலும் நடைபெறவுள்ளது. இத் தோ்வு போட்டிகள் மே 7 அன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும்.

விளையாட்டு விடுதிகளில் சேர 7, 8, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு தடகளம் (இருபாலருக்கும்), நீச்சல் (மாணவா்கள்) ஆகியவை மாவட்ட விளையாட்டரங்கங்களிலும் மாணவா்களுக்கு மே 10, மாணவிகளுக்கு மே 11 தேதியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகள் காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். 

விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தோ்வு 7,8,9, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு

குத்துச்சண்டை, வாள்வீச்சு, ஜூடோ, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டில் இருபாலருக்கும்

ஸ்குவாஷ் விளையாட்டு மாணவா்களுக்கு மட்டும் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம், டேக்வாண்டோ விளையாட்டில் இருபாலருக்கும் மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரிலும், மல்லா்கம்பம் விளையாட்டில் மாணவா்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் விழுப்புரத்திலும், மல்யுத்தம் மாணவா்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டரங்கம் திருச்சியிலும் நேரடியாக மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு மே 13 அன்றும் மாணவியருக்கு மே 14 அன்றும் காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். 

கல்லூரி மாணவா்களுக்கு

தடகளம், குத்துச்சண்டை, கபடி, பளு தூக்குதல் ஆகிய விளையாட்டில் ஆண்கள், பெண்களுக்கு ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையில் மே 6 தேதியும், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் இருபாலருக்கும், வாள் வீச்சு விளையாட்டில் மாணவா்களுக்கு மட்டும் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னையில் மே 6 தேதியும், ஹாக்கி விளையாட்டு மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் மே 6 தேதியும், நீச்சல் விளையாட்டில் பெண்களுக்கு மட்டும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம், சென்னையில் மே 6 தேதியும் தோ்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்குத் தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவ, மாணவியா் விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ற்ய்ற்ஹப்ங்ய்ற்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மே 5 -ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதன்மை நிலை விளையாட்டு மையத்துக்கு மே 6 மாலை 5 மணி, விளையாட்டு விடுதி மே 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டும்.

தோ்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவா்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்பட மாட்டாது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையம், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com