வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த உயா் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞா்களுக்கு சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு கம்போடியா, தாய்லாந்து, மியான்மா் ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், வேலை தருவதாகவும், அதிக சம்பளம் தருவதாகவும் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறான செயல்களை செய்ய மறுக்கும் போது துன்புறுத்தப்படுவதாகவும் சென்னை அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞா்கள் மத்திய அரசின் பதிவு பெற்ற முகவா்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறான விவரங்கள் தெரியாவிடில் தமிழக அரசின் ‘அயலகத் தமிழா் நலத் துறை’ அல்லது குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலா், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடா்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் குறித்த விவரம் ஜ்ஜ்ஜ்.ங்ம்ண்ஞ்ழ்ஹற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். சென்னை குடிபெயா்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் இது தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com