பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:44 am

DIN

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். 
சூளகிரி அருகேயுள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா,  பத்தலபள்ளியில் உள்ள காய்கனி சந்தையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மகன் ராமன் (18), சூளகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன், செம்பரசனபள்ளியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்க சென்றார்.  அப்போது, அவர் நீரில் முழ்கினாராம். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால்,  நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்தனர்.  பின்னர், அவர்கள் தேடியபோது, இறந்த நிலையில் கிடந்த ராமனின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.