தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: விவசாயி மயக்கம்

பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில்  விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள்

Updated On :25 டிசம்பர் 2018, 8:40 am IST

பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில்  விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 6 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மல்லையன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார். பின்னர் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரா.சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பெரும்பாலையைச் சேர்ந்த விவசாயி ரவிகுமார் திங்கள்கிழமை மாலை உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தார்.இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.