ஒசூரில் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 10:19 AM | Last Updated : 01st April 2019 10:19 AM | அ+அ அ- |

ஒசூரில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார்.
ஒசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளி கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்ட போது பெண்களிடம் சுமார் அரைமணி நேரம் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் எப்படி செயல்பட்டது என்றும், தற்போது எவ்வாறு செயல்படுகிறது என்றும் கேட்டார்.
அதற்கு அங்கிருந்தோர் திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தனர். மேலும், தங்கள் குழந்தைகளின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் செல்லகுமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ. பி.முருகன், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், சிறுபான்மைப் பிரிவு மாநில துணைச் செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.