பாப்பாரப்பட்டியில் ரூ. 1.35 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 11th April 2019 09:13 AM | Last Updated : 11th April 2019 09:13 AM | அ+அ அ- |

மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி மாதையன்(32) புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்றபோது பரம்வீர் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் வாகனச் செய்து கொண்டிருந்தத் தேர்தல் பறக்கும் படை குழுவினர் மாதையன் கொண்டுவந்த ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்தை ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
அதுபோல சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(28). மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் இவர், நான்கு சக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து பென்னாகரம் நோக்கி வந்தபோது பழையூர் சோதனை சாவடியில் இவரிடம் கண்காணிப்புக் குழுவினர் சோதனை நடத்தியதில் ரூ. 22 ஆ யிரத்து 400 மதிப்பிலான மின்விசிறி, மிக்ஸி, மின்சார அடுப்பு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.