போக்குவரத்து விதிகளை மீறியஆட்டோக்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th August 2019 05:09 AM | Last Updated : 04th August 2019 05:09 AM | அ+அ அ- |

பர்கூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 5 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும் துணி சந்தைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், நாட்றாம்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, பசவண்ணகோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
சாலை விதிமுறை மீறி இயக்கப்படும் இந்த ஆட்டோக்களால் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அடிக்கடி திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய நிலையில், பர்கூர் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில் சாலை விதிமுறைகளை மீறிய 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...