பள்ளி மாணவர்களுக்கு பாதை அமைத்து தர கோரிக்கை
By DIN | Published On : 04th January 2019 08:19 AM | Last Updated : 04th January 2019 08:19 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளி அருகே பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளியை அடுத்த குன்னூர் அருகே உள்ள அனுமாகவுண்டனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு செல்ல தென்னந்தோப்புகளின் வழியே ஒத்தையடி பாதையில் தான் செல்ல வேண்டும். இப் பாதையில் புதர்மண்டியும், விஷப்பூச்சிகள் வாழ்விடமாகவும் உள்ளது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமமடைகின்றனர்.
எனவே, இச்சாலையை விரிவுபடுத்தி, சிமென்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.