பண்ணந்தூர் அருகே கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி பஞ்சாயத்து சின்ன புளியம்பட்டி சிசிசி கிரிக்கெட் அணியினர் நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 அணிகள் கலந்துகொண்டன.
இதில், திருப்பத்தூர் 777 அணி முதல் இடத்தை பெற்று முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், சின்ன புளியம்பட்டி சிசிசி கிரிக்கெட் அணி இரண்டாம் பரிசான ரூ.20 ஆயிரமும், தருமபுரி அணியினர் முன்றாம் பரிசான ரூ.15 ஆயிரமும் பெற்றனர்.
இப் போட்டியில், சின்னபுளியம்பட்டி, கொட்டாவூர், குண்டானூர் அணியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.