சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
By DIN | Published On : 04th January 2019 08:19 AM | Last Updated : 04th January 2019 08:19 AM | அ+அ அ- |

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில், காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி தலைமை தாங்கினார். மூத்த தமிழ் ஆசிரியர் முனியப்பன் முன்னிலை வகித்தார். பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மேகலா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்தும், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது, பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்யக் கூடாது, சாலையைக் கடக்கும் போது இருபுறமும் கவனித்த பின் கடந்து செல்ல வேண்டும் எனவும், அடிப்படை சட்டங்களையும் எடுத்துரைத்தார்.
இதில், காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை லில்லி, தமிழாசிரியர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன் நன்றியுரையாற்றினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...