கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி நிறைவு
By DIN | Published On : 09th June 2019 05:25 AM | Last Updated : 09th June 2019 05:25 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தலைமை வகித்தார். காவல் கூடுதல் கண்காணிபாப்பளர் மோகன் ராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி எம்.கௌசித் தேவ், ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு கடந்த 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியில் 18 பெண்கள் உள்பட 81 பேர் பங்கேற்றனர். பயிற்சி நிறைவு நாளில், சிறந்த வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.