வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஒசூர் எம்எல்ஏ சத்யா
By DIN | Published On : 09th June 2019 05:27 AM | Last Updated : 09th June 2019 05:27 AM | அ+அ அ- |

ஒசூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா வாக்காளர்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தார்.
மாசிநாயக்கன்பள்ளி, பஞ்சேஷ்வரம், செட்டிப்பள்ளி, முகலூர், பாரந்தூர், டி.பாரந்தூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ சத்யா, இடைத் தேர்தலில் ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஒசூர் ஒன்றியச் செயலாளர் சின்ன பில்லப்பா, பொதுக்குழு உறுப்பினர் முனிராமைய்யா, ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமப்பா, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், நகர மாணவரணி துணை அமைப்பாளர் ரத்தன்சிங், நகர துணை அமைப்பாளர் நவீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.