வாகனம் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 14th June 2019 10:35 AM | Last Updated : 14th June 2019 10:35 AM | அ+அ அ- |

சூளகிரி அருகே நடந்து சென்றவர் மீது வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை பகுதியைச் சேர்ந்த திம்மராஜ் (32), கூலித் தொழிலாளி. இவர் சூளகிரி-ஒசூர் சாலையில் சூளகிரி தபால் அலுவலகம் அருகில் நடந்து சென்ற போது, அவ்வழியாக சென்ற வாகனம் திம்மராஜ் மீது மோதி நிற்காமல்
சென்றது.
இந்த விபத்தில் திம்மராஜ் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி காவல் உதவி ஆய்வாளர் பூபதி ராமராஜுலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.