முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது ரூ.50 ஆயிரம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடங்கியதாக இருக்கும். அதன்படி, இந்த விருது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2019-ஆம் ஆண்டுக்கான முதல்வர் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட
உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n மூலம் ஜூலை 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com