ஒசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
By DIN | Published On : 06th March 2019 09:02 AM | Last Updated : 06th March 2019 09:02 AM | அ+அ அ- |

ஒசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரி இயற்பியல் துறை சார்பில் சமகால சூழலுக்கு இயற்பியலின் பங்கு எனும் தலைப்பில் மாணவர்களுக்கு ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ். ஏ.மார்டின் பிரிட்டோ தாஸ் கலந்துகொண்டார். அவர் தற்காலச் சூழலில் இயற்பியல்துறை வளர்ந்து வரும் நானோ தொழில்நுட்பம் பற்றியும், அதிர்வுக் கருவிகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பற்றியும் மாணவர்களிடம் விளக்கினார்.
இவ் விழாவில், எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முனைவர் அ.முத்துமணி கலந்துகொண்டார். அவர் இயற்பியல் துறையின் கண்டுபிடிப்பால் தான் நாடு விரைவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், மாணவர்கள் இத் துறையில் விஞ்ஞானிகளாக ஆக வேண்டும் என்றும் மாணவர்களிடம் பேசினார்.
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றவர்களை இயற்பியல் துறைத் தலைவர் பேரா. ராஜ் மதன் ராஜ் வரவேற்றார். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் செ.விஜயன் நன்றியுரை வழங்கினார். இப் பயிற்சிப் பட்டறையில் இளநிலை, முதுநிலை இயற்பியல் துறை மாணவர்களும் பிற துறை பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.