விபத்தில் இளைஞர் பலி
By DIN | Published On : 06th March 2019 09:01 AM | Last Updated : 06th March 2019 09:01 AM | அ+அ அ- |

பாரூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள நாகர்குட்டையில் பாரூரில் இருந்து செல்லம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாரூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் (22) மீது செல்லம்பட்டியில் இருந்து பாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி மோதியது. இதில் சதீஷ் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகிலுள்ள பாரூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.