கபடி போட்டி: லம் முதல் பரிசு
By DIN | Published On : 05th May 2019 03:12 AM | Last Updated : 05th May 2019 03:12 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் சேலம் அணி முதல் பரிசை பெற்றது.
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தம்பிதுரை பிரதர்ஸ் சார்பில் 3-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.
போட்டியில், வேலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து சுமார் 40 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில் சேலம் அணி முதல் பரிசும், மொரப்பூர் அணி 2-ஆம் பரிசும் ஜோலார்பேட்டை 3-ஆம் பரிசும் மற்றும் பல மாவட்ட அணிகள் பரிசுகள் பெற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை தம்பிதுரை கபடி குழுவினர் செய்திருந்தனர்.