லாட்டரி சீட்டுகள் விற்ற மூவர் கைது
By DIN | Published On : 15th May 2019 08:21 AM | Last Updated : 15th May 2019 08:21 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்த செரிப் (31), நாராயணநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (54), செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (39) ஆகியோர் அரசினால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார், லாட்டரி சீட்டுகள் விற்ற மூவரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 109 லாட்டரி சீட்டுகள், ரூ.300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.