தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்
By DIN | Published On : 19th May 2019 09:33 AM | Last Updated : 19th May 2019 09:33 AM | அ+அ அ- |

தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தளி அருகே உள்ள உனிசேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கடந்த 6 மாதங்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவரை கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார்.
அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார்? எனத் தெரியவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது யார் என விசாரணை நடத்தி வருகிறார்.