வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 19th May 2019 09:34 AM | Last Updated : 19th May 2019 09:34 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மேல மாட வீதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி(48). இவர், அதேப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது, கோடை விடுமுறை என்பதால், கடந்த சில நாள்களுக்கு முன்பு, குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.