அரசு மகளிர் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 26th May 2019 05:09 AM | Last Updated : 26th May 2019 05:09 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மே 27-ஆம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் ரு.ரா.ஜெயந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 27-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
மே 27-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டிற்கான (விளையாட்டு வீராங்கனை, மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்) அனைத்து பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். மே 28-ஆம் தேதி பி.காம்., பி.காம் -சி.எஸ். ஆகிய பிரிவுகளுக்கும், 29-ஆம் தேதி அறிவியல் பிரிவில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், வேதியியல், உயிர் வேதியியல், புள்ளியியல், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும், மே 30-ஆம் தேதி கலைப் பாடப்பிரிவுகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.