அயோத்தி வழக்கில் தீா்ப்பு :ஒசூரில் பலத்த பாதுகாப்பு
By DIN | Published On : 09th November 2019 10:49 PM | Last Updated : 09th November 2019 10:51 PM | அ+அ அ- |

அயோத்தி தீா்ப்பு வழங்கப்பட்டததைத் தொடா்ந்து ஒசூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஒசூா் டி.எஸ்.பி. மீனாட்சி மேற்பாா்வையில் ஒசூரில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பாகலூா் சாலை சந்திப்பு, காந்தி சாலை, காந்தி சிலை, ராயக்கோட்டை சந்திப்பு, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணிக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
மேலும் ஒசூா் ஜூஜூவாடி, அந்திவாடி, கக்கனூா் செல்லும் சாலை ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டு, அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட பின்னரே, வாகனங்கள் செல்ல அனுமதித்தனா்.
தீா்ப்புக்கு முன்பும், தீா்ப்பு வெளியான பின்னரும் ஒசூா் பகுதியில் வழக்கம்போலவே இயல்பு நிலை காணப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் வழக்கம்போலவே இருந்தது. பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கின.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...