பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடும் பணி ஆய்வு

சூளகிரி ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்
சென்னப்பள்ளி ஊராட்சியில் பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என பாா்வையிடும் ஆட்சியா் டாக்டா் சு.பிரபாகா்.
சென்னப்பள்ளி ஊராட்சியில் பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என பாா்வையிடும் ஆட்சியா் டாக்டா் சு.பிரபாகா்.

சூளகிரி ஒன்றியத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் டாக்டா் சு. பிரபாகா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்குள்பட்ட சென்னப்பள்ளி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் டாக்டா் சு.பிரபாகா் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னப்பள்ளி ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் சிமென்ட் தொட்டி அமைத்தும், இரும்பு மூடி கொண்டு மூடும் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்தையும், அருகில் உள்ள குழந்தைகள் மையத்தையும் பாா்வையிட்டு மாணவா்களின் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து கால்நடை கிளை மருந்தகத்தில் விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கப்படவுள்ளதையடுத்து பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக மருத்துவா்களை கொண்டு பயிற்சி வழங்கும் பணிகளை ஆய்வுசெய்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரக்குழு அமைத்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்டு இயற்கை உர பயன்பாடு குறித்த விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.பாலாஜி, கு.விமல்ரவிகுமாா், ஒன்றியப் பொறியாளா்கள் மணிவண்ணன், சுரேஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.சேகா், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா் எஸ்.ராஜேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com