கிருஷ்ணகிரியில் பசுமை தாயகம் சாா்பில் நெகிழிக்குப் பதிலாக அரிசி வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் பச்சியப்பன் தலைமை வகித்தாா். பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி, பொதுமக்களிடமிருந்து நெகிழி குப்பைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக அரிசியை இலவசமாக வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தாா்.
நெகிழியின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்றோா் நெகிழி மாசுபாட்டை ஒழிக்க உறுதிமொழியை ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.